பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி ஒருவர் கூட தப்பித்து விடக்கூடாது என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ள நிலையில், 2 ஆண்டுகளுக்குப் பிறகு திடீர் திருப்பமாக வழக்கில் தொடர்புடைய அதிமுக பிரமுகர் உள்பட 3 பேரை கைது செய்து சிபிஐ விசாரணை நடத்தியது.
தொடர்ந்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அருளானந்தம், ஹெரேன்பால், பாபு ஆகிய மூவரையும் 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், 'ஆறேழு ஆண்டுகளாக - பல நூறு பெண்கள் சீரழிக்கப்பட்ட பொள்ளாச்சி பாலியல் கொடூரம் தொடர்பான வழக்கில் அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் - கூட்டாளிகளை சிபிஐ கைது செய்திருக்கிறது.
பாலியல் கொடூர வழக்கில் தொடர்புடைய தமது கட்சியினரைக் காத்து வருகிறது முதல்வர் பழனிசாமி தலைமையிலான ஆட்சி.
தமிழ்நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து, அதிமுகவினர் உட்பட தொடர்புடைய குற்றவாளிகளில் ஒருவர் கூடத் தப்பிவிட சிபிஐ அனுமதிக்கக் கூடாது. அவர்கள் விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்!' என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்புடையது

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


