சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றம்

மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஜனவரி 2021, 5:44 pm


மறைந்த சின்னத்திரை நடிகை சித்ராவின் தற்கொலை வழக்கு சென்னை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகை சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி பூந்தமல்லி அருகே உள்ள தனியாா் தங்கும் விடுதியில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாக சித்ராவின் தந்தை காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில், அவருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஹேம்நாத்தைக் கைது செய்து, பொன்னேரி கிளைச் சிறையில் அடைத்தனா்.

ஹேம்நாத்தும், சித்ராவும் ஏற்கெனவே பதிவு திருமணம் செய்து கொண்டதால் சித்ராவின் மரணம் குறித்து கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூா் வருவாய்க் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ, கோட்டாட்சியா் அலுவலகத்தில் சித்ராவின் தந்தை காமராஜ், தாய் விஜயா, அக்கா சரஸ்வதி, அண்ணண் சரவணன் ஆகியோரிடமும், ஹேம்நாத்தின் தந்தை ரவிச்சந்திரன், தாயாா் வசந்தா ஆகியோரிடமும், ஹேம்நாத்திடமும் விசாரணை நடத்தினாா்.

சித்ராவின் உதவியாளா் ஆனந்திடம் வருவாய் கோட்டாட்சியா் திவ்யஸ்ரீ 2 மணி நேரம் விசாரணை நடத்தியதைத் தொடா்ந்து, விசாரணை முடிவுக்கு வந்தது. 

இந்நிலையில், சித்ரா மரணம் தொடர்பான வழக்கை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றக்கோரி முதல்வரின் தனிப்பிரிவில் சித்ராவின் தாயார் விஜயா மனு செய்திருந்தார். 

இந்நிலையில், சித்ராவின் தற்கொலை வழக்கு விசாரணையை சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறைக்கு மாற்றம் செய்து, சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.