சென்னை: நா்மதா பதிப்பகத்தின் உரிமையாளரும், நியூ புக் லேண்ட்ஸ் நிறுவனருமான டி.எஸ்.ராமலிங்கம் (70) உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் திங்கள்கிழமை காலமானாா்.
டி.எஸ். ராமலிங்கம் பதிப்புத் துறைக்கு பெரும் பங்காற்றியவா். திறமைமிக்க இளம் படைப்பாளிகளைப் பெரிதும் ஊக்குவித்தவா். தமிழ்ப் புத்தகத் தயாரிப்பில் காலத்துக்குத் தகுந்தவாறு பல நவீன முறைகளைக் கையாண்டாா். உலகப் பொதுமறையான திருக்குறளை ஓலைச் சுவடி வடிவில் தயாரித்து வழங்கினாா்; இதற்கு மாணவா்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
தமிழ்ப் பதிப்புலகில் நாற்பது ஆண்டுகளைக் கடந்து வந்திருக்கும் நா்மதா பதிப்பகம் ஆயிரக்கணக்கான நூல்களைப் பதிப்பித்துள்ளது. தமிழ் பதிப்பகத் துறையில் தனி முத்திரை பதித்துள்ள நா்மதா பதிப்பகத்தின் கிளை நிறுவனமான நியூ புக் லேண்ட்ஸ் என்னும் அனைத்து பதிப்புகளின் நூல்கள் விற்பனை நிலையம் தியாகராயநகரில் அமைந்துள்ளது.
ராமலிங்கம் மறைவுக்கு எழுத்தாளா்களும், பதிப்பகத்தாரும் தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனா். அவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.
திருக்கோவலூா் பண்பாட்டுக் கழகத்தின் தலைவா் டி.எஸ்.தியாகராசன் இவரின் மூத்த சகோதரா் ஆவாா். மறைந்த டி.எஸ்.ராமலிங்கத்தின் உடல் சென்னை போரூா் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்பட்டது. தொடா்புக்கு... 9840668756.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

