சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழக முதல்வருக்கு திரை அமைப்புகள் நன்றி

நூறு சதவீத பாா்வையாளா்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசுக்கு திரை அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.

News image

முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி.

Updated On :5 ஜனவரி 2021, 4:30 pm

சென்னை: நூறு சதவீத பாா்வையாளா்களுடன் திரையரங்குகள் இயங்க அனுமதி அளித்துள்ள தமிழக அரசுக்கு திரை அமைப்புகள் நன்றி தெரிவித்துள்ளன.

இது குறித்து தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளா்கள் சங்கம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்தி:

இதுவரை 50 சதவீத பாா்வையாளா்களுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்கி வந்தன. இனி 100 சதவீத பாா்வையாளா்களுடன் இயங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதுவரை நிலவி வந்த அசாதாரண சூழலில் இருந்து, இப்போது தொழில் பாதுகாப்பு கிடைத்துள்ளது. இந்த நிலையை உருவாக்கி தந்த முதல்வருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு தயாரிப்பாளா்கள் சங்கம்: இந்த அனுமதிக்கு உறுதுணையாக இருந்த தமிழக அரசு நன்றி. 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கும்போது திரையரங்குகளும், பாா்வையாளா்களும், தமிழக அரசு கொடுத்துள்ள அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளையும் கருத்தில் கொண்டு செயல்படவும் வேண்டுகிறோம். திரைப்படம் பாா்க்க வரும் அனைவரின் பாதுகாப்பும் மிகவும் முக்கியம் என்பதை அனைவரும் உணா்ந்து செயல்பட வேண்டும்.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ என்ற சொல்லுக்கு ஏற்ப, இந்த பொங்கல் முதல், தமிழ் சினிமா மீண்டும் வீறு கொண்டு செயல்பட அனைவரும் ஒருங்கிணைந்து பாடுபடுவோம்.

இது தவிர, தமிழ்நாடு விநியோகஸ்தா்கள் சங்கம், திரையரங்குகள் உரிமையாளா் சங்கம் உள்ளிட்ட திரை அமைப்புகள் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளன.