சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

தமிழகத்தில் கரோனா பாதித்து தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

News image

தமிழகத்தில் கரோனா நோயாளிகள் எண்ணிக்கை 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்தது

Updated On :5 ஜனவரி 2021, 3:32 pm

தமிழகத்தில் கரோனா பாதித்து தற்போது சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை காலை நிலவரப்படி 8 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா பாதித்தவர்களில் இன்று காலை நிலவரப்படி 7,970 பேர் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது ஒட்டுமொத்த பாதிப்பில் 0.97 சதவீதமாகும்.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு குறித்த புள்ளி விவரத்தை சுகாதாரத் துறை வெளியிட்டுள்ளது.

அதில், இதுவரை தமிழகத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 8,21,550 ஆக உள்ளது. இவர்களில் 7,970 பேர் சிகிச்சையில் உள்ளனர். இதுவரை 8.01 லட்சம் பேர் கரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி நேற்று மேலும் 10 போ் பலியாகியுள்ளனா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் கரோனாவுக்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,166-ஆக உயா்ந்துள்ளது.

திங்கள்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் புதிதாக 838 பேருக்கு கரோனா கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 7,970 போ் சிகிச்சையில் உள்ளனா். நேற்று ஒரே நாளில் 985 பேர் கரோனாவிலிருந்து மீண்டுள்ளனர்.

தொடக்கம் முதல் இன்று வரை அதிகபட்சமாக சென்னையில்தான் அதிக கரோனா பாதிப்பு பதிவானது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 2,359 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதற்கடுத்த இடங்களில் கோவை (742), செங்கல்பட்டு (480), சேலம் (313), ஈரோடு (296) ஆகிய மாவட்டங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழகத்தில் கரோனா பாதித்தவர்களில் 13 - 60 வயதுக்கு உள்பட்டவர்கள் 6,83,581 பேர் ஆவர்.