சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சென்னையில் அடுத்த 6 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்: வானிலை ஆய்வு மையம்

சென்னையில் அடுத்த 6 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

News image

அடுத்த 6 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும்

Updated On :5 ஜனவரி 2021, 9:54 pm

சென்னையில் அடுத்த 6 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. 

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்றிரவு முதலே சென்னை செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் சைதாப்பேட்டை, அடையாறு, மெரினா, பெசன்ட்நகர், மயிலாப்பூர், கிண்டி, வடபழனி, விமானநிலையம் உள்ளிட்ட பல பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்த வருவதால் சாலைகளில் தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் அடுத்த 6 மணி நேரத்திற்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.