கேரளத்தில் பரவிவரும் பறவைக்காய்ச்சல் தமிழகத்திற்கு வராமல் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும், இது மனிதர்களுக்கும் பரவ வாய்ப்பு உள்ளதாகவும் சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், 'தமிழகத்தில் கரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருகிறது. சென்னை மாநகராட்சி மற்றும் சுகாதாரத்துறை தொடர்ந்து பல்வேறு முகாம்களில் கரோனா பரிசோதனையை செய்து வருகிறது.
பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்தவர்கள் 2,144 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 24 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. பிரட்டனிலிருந்து வந்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 20 பேருக்கு என மொத்தமாக 44 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கேரளத்தில் பரவி வரும் பறவைக் காய்ச்சல் தமிழகத்தில் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பறவைக் காய்ச்சல் மனிதர்களுக்கும் வரலாம். எனவே, கேரளத்தை ஒட்டியுள்ள தமிழக மாவட்டங்களான தேனி, திருப்பூர், நீலகிரி, கோயம்புத்தூர், கன்னியாகுமரி தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 26 செக் போஸ்ட்களில் சோதனை மேற்கொள்ளப்படுகிறது. கால்நடைத்துறை- சுகாதாரத்துறை இணைந்து போர்க்கால அடிப்படையில் செயல்படுகிறது.
மழைக்காலம் என்பதால் டெங்கு பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 5 மடங்கு டெங்கு பாதிப்பு குறைவு' என்று தெரிவித்தார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


