தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் அம்மா மினி கிளினிக் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம் சுருளிப்பட்டியில் அம்மா மினி கிளினிக் சுருளி அருவி செல்லும் வழியில் அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது.
இதுபற்றி சுருளிப்பட்டி ஊராட்சிமன்ற தலைவர் நாகமணி வெங்கடேசன் கூறும்போது, ஊராட்சிக்குச் சொந்தமான சேவை மைய கட்டடத்தில் அம்மா மினி கிளினிக் அமைக்கப்பட்டுள்ளது.
தற்போது சுவர்களில் வண்ணம் பூசும் பணி, தளவாடச் சாமான்கள் வாங்கும் பணி, சுத்தம் செய்யும் பணிகள் நிறைவடைந்துள்ளன. எங்கள் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையை அரசு நிறைவேற்றிய உள்ளது என்றார்.
அம்மா கிளினிக் அமைய உள்ள கட்டடத்தில், வட்டார மருத்துவ அலுவலர் முருகன், காமய கவுண்டன்பட்டி அரசு ஆரம்பச் சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள் சுதா, முருகானந்தம், சித்த மருத்துவர் சிராஜூதீன், சுகாதார மேற்பார்வையாளர் கண்ணன், சுகாதார ஆய்வாளர்கள் சூரியகுமார் மற்றும் கௌதம் ஆகியோர் மருத்துவ உபகரணங்களை அமைத்து வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


