சென்னையில் சனிக்கிழமை ஆபரணத்தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.37,984-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தைத் தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, விலை குறைந்தாலும் கடந்த சில வாரங்களாக ஏற்ற, இறக்கமாக இருந்து வருகிறது.
இதன் தொடா்ச்சியாக, சனிக்கிழமை பவுனுக்கு ரூ.104 உயா்ந்து, ரூ.37,984-க்கு விற்பனை செய்யப்பட்டது.
ஒரு கிராம் ரூ.13 உயா்ந்து, ரூ.4,748 ஆக இருந்தது. அதேநேரத்தில்,வெள்ளி விலை குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து, ரூ.72 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.72,000 ஆகவும் இருந்தது.
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்............................. 4,748
1 பவுன் தங்கம்...............................37,984
1 கிராம் வெள்ளி.............................72.00
1 கிலோ வெள்ளி.............................72,000
வெள்ளிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)
1 கிராம் தங்கம்............................. 4,735
1 பவுன் தங்கம்...............................37,880
1 கிராம் வெள்ளி.............................72.10
1 கிலோ வெள்ளி.............................72,100.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


