போடி: வீரபாண்டிய கட்டபொம்மன் பிறந்த தினத்தை முன்னிட்டு போடியில் ஞாயிற்றுக்கிழமை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட பல்வேறு அமைப்பினர் பேரணியாக சென்று சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட்டவர்களில் முக்கிய இடம் பெற்றவர் வீரபாண்டிய கட்டபொம்மன். தென் மாவட்டங்களில் மதுரையை அடுத்து தேனி மாவட்டம் போடியில்தான் கட்டபொம்மன் சிலை அமைந்துள்ளது. சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்டவராக கருதப்படும் வீரபாண்டிய கட்டபொம்மனின் 262-வது பிறந்த தினம் தேனி மாவட்டம் போடியில் கொண்டாடப்பட்டது.
அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபன்னீர்செல்வம் போடியில் உள்ள கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கட்டபொம்மன் சிலைக்கு நாயுடு, நாயக்கர் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதேபோல் போடி, தேனி, ஆண்டிபட்டி, பெரியகுளம், கம்பம் உள்ளிட்ட தேனி மாவட்டத்தின் பல்வேறு ஊர்களை சேர்ந்தவர்களும், திண்டுக்கல், மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் போடிக்கு வந்து கட்டபொம்மன் பிறந்த தினத்தில் கலந்து கொண்டனர்.
போடி கட்டபொம்மன் பண்பாட்டு கழகம், நாயுடு, நாயக்கர் பேரவையினர் உள்ளிட்ட அமைப்பினர் ஊர்வலமாக கட்டபொம்மன் சிலைக்கு வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும் பாரம்பரிய கலைகளான உருமி மேளம், தேவராட்டம், சிலம்பாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
போடி ஜக்கமநாயக்கன்பட்டி, பொட்டிப்புரம், கரட்டுப்பட்டி, சூலப்புரம் பகுதியை சேர்ந்தவர்களும் தேவாரட்டம் ஆடிக்கொண்டு ஊர்வலமாக வந்து கட்டபொம்மன் சிலைக்கு மாலை அணிவித்தனர். இதேபோல் பல்வேறு அரசியல் கட்சிகள், அமைப்புகளை சேர்ந்தவர்களும் மாலை அணிவித்தனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


