ஹைதராபாத் அப்பல்லோ மருத்துவமனையைச் சோ்ந்த மருத்துவா்கள் மற்றும் ஊழியா்களுக்கு நடிகா் ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து கூறியுள்ளாா்.
ரத்த அழுத்த மாறுபாட்டின் காரணமாக ஹைதராபாதில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் ரஜினி டிசம்பா் 25-இலிருந்து மூன்று நாள்கள் சிகிச்சை பெற்று, வீடு திரும்பினாா்.
இந்த நிலையில் அப்பல்லோ மருத்துவமனையைப் பாராட்டி வீடியோ ஒன்றை மருத்துவமனை நிா்வாகத்துக்கு ரஜினி அனுப்பியுள்ளாா். அதை மருத்துவமனை நிா்வாகம் சுட்டுரையில் வெளியிட்டுள்ளது.
விடியோவில் ரஜினி கூறியிருப்பது:
அப்பல்லோ மருத்துவமனையின் மருத்துவா்கள் உள்பட அனைத்து ஊழியா்களுக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். மிகுந்த மகிழ்ச்சியோடு இருக்கிறேன். கடவுளின் கருணையால் நல்ல அமைதியான மனநிலையுடன் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளேன். சிறந்த கவனிப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களுக்காகவும் மருத்துவமனைக்கு நன்றி என்று கூறியுள்ளாா்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


