திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக பனிப்பொழிவு அதிகரித்துள்ளது. குறிப்பாக மலர் சாகுபடி செய்யப்படும் நிலக்கோட்டை பகுதியில், இந்த பனிப் பொழிவின் காரணமாக மல்லிகை சாகுபடி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாளொன்றுக்கு 50 டன் மல்லிகைப் பூ வந்த இடத்தில், தற்போது 50 கிலோ பூக்களை மட்டுமே விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வருகின்றனர். நிலக்கோட்டை சந்தையில் சனிக்கிழமை நிலவரப்பட்டி, காய் மல்லிகைப் பூ ரூ.1,000 முதல் ரூ.1,500 வரையிலும், 2ஆம் ரகம் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.4 ஆயிரம் வரையிலும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் முதல் ரகம் ரூ.5 ஆயிரத்திற்கும் விற்பனையானது. கடந்த 3 ஆண்டுகளில் மல்லிகைப் பூவுக்கு கிடைத்துள்ள அதிகபட்ச விலையாக இந்த தொகை பதிவாகியுள்ளது.
பனிப்பொழிவு அதிகரிக்கும்பட்சத்தில், பொங்கல் பண்டிகையையொட்டி மல்லிகை பூ விலை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மல்லிகை பூ மட்டுமின்றி, முல்லை, ஜாதிப் பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. முல்லை பூ கிலோ ரூ.1100க்கும், ஜாதி பூ கிலோ ரூ.800க்கும் சனிக்கிழமை விற்பனை செய்யப்பட்டது.நோய் தாக்குதலாலும் செடிகள் பாதிக்கப்பட்டது.
நிலக்கோட்டை பகுதிகளில் பனிப்பொழிவு மட்டுமின்றி, சாரல் மழையும் பெய்து வருகிறது. இதனால் மல்லிகைப் பூ செடிகளில், மொட்டு கருகள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது. இதனால் மல்லிகை செடிகளைப் பாதுகாக்கப் பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


