சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சமூக சேவகர் விருது அளிப்பு

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

News image

சமூக சேவகர் விருதுபெற்ற  ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள்.

Updated On :2 ஜனவரி 2021, 5:34 pm

ஊத்தங்கரை: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் சமூக சேவகர் விருது வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இந்த நிகழ்ச்சிக்கு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமை தாங்கினார். ஊத்தங்கரை கிளை ரெட் கிராஸ் தலைவர் தேவராசு, துணைத் தலைவர் ராஜா, சமுக ஆர்வலர் சசி என்கிற கோமதி, உதவி தலைமை ஆசிரியர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

Story image

ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் தீயணைப்பு வீரர்கள் ராமமூர்த்தி, விஜயகுமார், அந்தோணிசாமி,அன்பு,  கிருஷ்ணமூர்த்தி, முனுசாமி, உத்திரகுமார், இராமு, சிதம்பரம், மணிகண்டன், சமுத்திரன், சீனிவாசன் ஆகியோரை பாராட்டி சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது. 

நோய் தொற்று காலத்தில் கிருமிநாசினி அடித்தல், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்துதல், இல்லாதோர்க்கு உணவு வழங்குதல், உள்பட பல்வேறு பணிகளை செய்த ஊத்தங்கரை தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் சமூக சேவகர் விருது வழங்கப்பட்டது.