சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தம்மம்பட்டியில் காசி விஸ்வநாதர் கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை

தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் யங் டைமண்ட் கிரிக்கெட் கிளப் சார்பில் 30 ஆவது வருடமாக, ஆங்கிலப் புத்தாண்டு தின சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.  

News image

அழகிய அலங்காரத்தில் தம்மம்பட்டி காசி விஸ்வநாதர் ஸ்வாமி

Updated On :1 ஜனவரி 2021, 8:30 pm


தம்மம்பட்டி: தம்மம்பட்டி ஸ்ரீ காசி விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் திருக்கோவிலில் யங் டைமண்ட் கிரிக்கெட் கிளப் சார்பில் 30 ஆவது வருடமாக, ஆங்கிலப் புத்தாண்டு தின சிறப்பு பூஜை வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.  

இதற்காக சிவன், பார்வதி, சூரிய பகவான், விநாயகர், முருகன், சிவதுர்க்கை, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், பைரவர், சனீஸ்வரன்  ஆகிய விக்கிரகங்களுக்கு சிறப்பு அபிசேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் செய்யப்பட்டது. 

Story image

ஆங்கில புத்தாண்டு சிறப்பு அலங்காரத்தில் காசி விசாலாட்சி

இதில் உலக மக்கள் கரோனாவிலிருந்து விடுபட சிறப்பு யாகம் நடத்தப்பட்டது. ஒய் டி சிசி கிளப் தலைவர் திருச்செல்வன் தலைமையில் விழா நடைபெற்றது. 

ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜையில் பங்கேற்ற திரளான மக்களுக்கு தம்மம்பட்டி சிவன், பார்வதியின்அழகிய , பெரிய வண்ண படங்கள்  திருச்செல்வன் வழங்கினார்.

இதேபோல் தம்மம்பட்டியில் உள்ள பெருமாள் கோவிலிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.