சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாடு

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வெள்ளிக்கிழமை புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News image

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் புத்தாண்டு சிறப்பு வழிபாட்டில் தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்த குரு பகவான்.

Updated On :1 ஜனவரி 2021, 8:03 pm


நீடாமங்கலம்: நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவிலில் வெள்ளிக்கிழமை புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இக்கோவில் திருஞான சம்பந்தரால் பாடல் பெற்றது. நவக்கிரக ஸ்தலங்களில் குரு பகவானுக்கு பரிகாரதலமாக விளங்குகிறது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு நடந்தது.

இதனை முன்னிட்டு அதிகாலை கோவிலில் அனைத்து சன்னதிகளிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. மூலவர் குரு பகவானுக்கு தங்க கவசம் சாற்றப்பட்டது.

இதேபோல் நீடாமங்கலம் சந்தானராமர் கோவில், வீரஆஞ்சநேயர் கோவில், பூவனூர் சதுரங்கவல்லப நாதர் கோவில், நீடாமங்கலம் காசிவிசுவநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதிலும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.