தமிழகத்தில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நாளை தொடங்கவுள்ள நிலையில், 2 மணி நேரத்தில் 25 பேருக்கு தடுப்பூசி போடுவதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:
தமிழகத்தில் கரோனா தொற்று பெருமளவு குறைந்துள்ளது. தமிழகத்தில் தொற்று குறைந்தாலும், பரிசோதனையை குறைக்கவில்லை. பரிசோதனையை குறைக்கக் கூடாது என்பதே நம் திட்டம். சுகாதாரத்துறையில் வலுவான கட்டமைப்பைக் கொண்டிருக்கிறோம்.
சென்னை, திருவள்ளூர், கோவை, நீலகிரி, நெல்லை ஆகிய மாவட்டங்களில் நாளை கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெறுகிறது. 5 மாவட்டங்களிலுள்ள மொத்தம் 17 இடங்களில் ஒத்திகை நடைபெறும். பாதுகாப்பாக கவனமாக துல்லியமாக செய்யவேண்டிய விஷயம். எனவே சரியான திட்டமிடலுக்காக ஒத்திகை அவசியமாகிறது. கரோனா தடுப்பூசி பணிக்காக சுகாதாரப் பணியாளர்கள் 21,170 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. 2 மணி நேரத்தில் 25 பேருக்கு கரோனா தடுப்பூசி போட வேண்டும் என நிர்ணயித்துள்ளோம். இதற்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது என்றார்.
முன்னதாக, பல்வேறு மாநிலங்களில் கரோனா தடுப்பூசி ஒத்திகை நடைபெற்று வரும் நிலையில் தமிழகத்தில் வருகின்ற ஜனவரி 2 ஆம் தேதி கரோனா தடுப்பூசி ஒத்திகை நடக்கவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


