சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கந்தர்வகோட்டை பகுதி கோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜைகள்

கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார கோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு பூஜைகள் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. 

News image

கந்தர்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன்

Updated On :1 ஜனவரி 2021, 7:14 pm


கந்தர்வகோட்டை: கந்தர்வகோட்டை மற்றும் சுற்றுவட்டார கோவில்களில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு பூஜைகள் வெள்ளிக்கிழமை சிறப்பாக நடைபெற்றது. 

கந்தர்வகோட்டை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில், ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில், வெள்ள முனியன் கோவில் , கோதண்டராமர் கோவில், அமறவதி உடனுறை ஆபத்சகாயேஸ்வரர் கோவில் , தச்சன் குறிச்சி குகை முருகன் சன்னதி, ஆதனக்கோட்டை வீரடி விநாயகர் , முத்துமாரியம்மன் , பெரம்பூர் வீரமகாளி அம்மன் உள்ளிட்ட கோவில்களிலும் கந்தர்வகோட்டை மாதா கோவிலிலும் சிறப்பு திருப்பலி நிகழ்சியும் நடைபெற்றது. 

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு அதிகாலை முதல் சுவாமிகளுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்களும் , பூஜைகளும் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தனர். ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு பக்தர்கள் புத்தாடை அணிந்து சுவாமியை வணங்கி வழிப்பட்டனர்.