சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பெரியார் சிலைக்கு முதல்வர் ஜெயலலிதா செப்டம்பர் 17-இல் மரியாதை

தந்தை பெரியாரின் 135-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்துகிறார்.

Updated On :12 செப்டம்பர் 2013, 7:13 am

தந்தை பெரியாரின் 135-ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு அவரது சிலைக்கு மலர் தூவி முதல்வர் ஜெயலலிதா மரியாதை செலுத்துகிறார்.

இது குறித்து, அதிமுக தலைமைக் கழகம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

பெரியாரின் 135-ஆவது பிறந்த தினம் வரும் 17-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு முதல்வரும் கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்.

இந்த நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சியின் பல்வேறு கிளை அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகள் என அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கட்சி வெளியிட்ட அறிவிப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.