காவேரிப்பாக்கத்தை அடுத்த பெரியகிராமம் கல்கத்தா காளி கோயில் அருகே 3 லாரிகள் புதன்கிழமை விடியற்காலை கவிழ்ந்தன. இதில் 4 டிரைவர்கள் காயம் அடைந்தனர்.
வேலூரில் இருந்து சென்னைக்குச் சென்ற கன்டெய்னர் லாரியின் டயர், காவேரிப்பாக்கத்தை அடுத்த பெரியகிராமம் காளி கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் திடீரென வெடித்தது. இதில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையைத் தாண்டி சாலையில் கவிழ்ந்தது.
அப்போது, சென்னை செங்குன்றத்தில் இருந்து ஆரணி நோக்கி நெல் மூட்டைகளை ஏற்றி வந்த மற்றொரு லாரி ஏற்கெனவே ரோட்டில் கவிழ்ந்து கிடந்த லாரி மீது மோதியது. நெல் மூட்டை லாரியை பின் தொடர்ந்து வந்த டீசல் டேங்கர் லாரியும் அதன்மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் காயமடைந்த லாரி டிரைவர்கள் சுரேஷ் (26), ராஜ்குமார் (32), பூங்காவனம் (35), ரவி (44) ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தகவலறிந்த காவேரிப்பாக்கம் போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இடிபாடுகளில் சிக்கித் தவித்த 3டிரைவர்களை போராடி மீட்டனர். நெல் மூட்டை லோடு ஏற்றி வந்த லாரி டிரைவர் ராஜ்குமாரை தீயணைப்புப் படையினர் உதவியுடன் 3 மணி நேரம் போராடி மீட்டனர். இச்சம்பவம் குறித்து காவேரிப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரத்து வருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


