காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலுக்கு வருவோரின் பைகளை சோதனை செய்ய ரூ.50 லட்சத்தில் ஸ்கேனர் கருவி வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து கோவில் நிர்வாக அலுவலர் ஏ. ராஜராஜன்வீராசாமி புதன்கிழமை கூறியது:
காவல் துறையின் ஆலோசனைப்படி, கோவிலுக்கு வரும் பக்தர்களின் பைகளை சோதனை செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து, பக்தர்களின் பைகளை ஸ்கேன் செய்து கோவிலுக்குள் அனுமதிக்க முடிவு செய்யப்பட்டு அரசின் அனுமதி பெறப்பட்டது.
இதற்காக, ரூ.50 லட்சத்தில் 3 நவீன ஸ்கேனர் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது. அரசின் இறுதி ஒப்புதல் கிடைத்தவுடன் ஒரு மாதத்தில் ஸ்கேனர் வரவழைக்கப்படும். இதற்காக கோவில் ஊழியர்களுக்கு பயிற்சி அளித்து, காவல் துறையின் ஒத்துழைப்புடன் சோதனை செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார் அவர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

