திமுக தலைவர் கருணாநிதி மீது தமிழக அரசு சார்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மேலும் ஒரு அவதூறு வழக்கு புதன்கிழமை (செப். 11) தாக்கல் செய்யப்பட்டது.
திமுகவின் தினசரி நாளிதழான முரசொலியில் கலைஞர் பதில்கள் என்ற செய்தி கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி வெளியானது.
அதில், சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடந்த பட்டமளிப்பு விழாவில், முதல்வர் பேசிக்கொண்டிருந்தபோது அமைச்சர்கள் பலர் தூங்கிக்கொண்டிருந்த படம் தினமலர் நாளிதழின் முதல் பக்கத்தில் வெளியானது.
அந்தப் படம் வெளியிடப்பட்டதால்தான் திருவண்ணாலை மருத்துவக் கல்லூரி மற்றும் திருச்சி தேசிய சட்டப் பள்ளி தொடக்க விழாவுக்கான இரண்டு பக்க அரசு விளம்பரம் தினமலருக்கு தரப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அந்த செய்தி உண்மைக்குப் புறம்பாகவும் உறுதிப்படுத்தப்படாமலும் வெளியிடப்பட்டுள்ளது.
அதனால், முதல்வரின் நற்பெயருக்கும் புகழுக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளதாகக் கூறி, அந்த செய்தியை எழுதிய கருணாநிதி மீதும், முரசொலி பத்திரிகையின் ஆசிரியர் எஸ்.செல்வம் மீதும் முதல்வர் சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன், சிறப்பு வழக்குரைஞர் அசோகன் ஆகிய இருவரும் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் எனக் கூறப்படுகிறது. மேலும், இது திமுக தலைவர் கருணாநிதி மீது தாக்கல் செய்யப்படிருக்கும் 12-ஆவது வழக்கு என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


