நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே 16.5 கிலோ தங்கக் கட்டிகளை ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்த மத்திய வருவாய் நுண்ணறிவு போலீஸார், பிடிபட்டவர் வீட்டில் 3 மணி நேரம் சோதனை செய்தனர்.
வேதாரண்யத்தை அடுத்த தேத்தாக்குடி தெற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் கோவிந்தன் (60). இவரது மகன் மகேஸ்வரன் (35). இவர் ஞாயிற்றுக்கிழமை காலை தேத்தாக்குடியில் இருந்து திருப்பூண்டி பகுதிக்கு ஒரு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.
அப்போது, ஆலங்குடி பாலம் அருகேயுள்ள சீராவட்டம் பகுதியில் சென்னை மற்றும் திருச்சியைச் சேர்ந்த மத்திய வருவாய் நுண்ணறிவு போலீஸார் அவரை நிறுத்தி சோதனையிட்டபோது, அவரிடம் 16.5 கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது.
அந்தத் தங்கத்துக்கான முறையான ஆவணங்கள் இல்லாதிருந்ததால் அவரிடமிருந்து தங்கத்தை நுண்ணறிவு போலீஸார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து, தேத்தாக்குடியில் உள்ள அவரது வீட்டில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணி முதல் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்தச் சேதனையில் சென்னை, திருச்சி மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு அலுவலர்கள், கோடியக்கரை, நாகை, தோப்புத்துறை பகுதிகளைச் சேர்ந்த சுங்கத்துறை அலுவலர்கள் என சுமார் 20 பேர் ஈடுபட்டனர்.
சுமார் 3 மணிநேரம் நடந்த சோதனையில் ஆவணங்கள் அல்லது வேறு பொருள்கள் கிக்கியதா போன்ற எவ்வித விவரங்களும் உடனடியாகத் தெரியவில்லை. வருவாய் நுண்ணறிவு போலீஸாரிடம் ஏற்கெனவே மகேஸ்வரன் பிடிபட்டுள்ள நிலையில், இதுதொடர்பான விசாரணைக்கு கோவிந்தன் மனைவி மீனாட்சி மற்றும் மகள் தர்மதேவி ஆகியோரையும் போலீஸார் அழைத்துச் சென்றதாகத் தெரிகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

