திருக்கோவிலூர் அருகே, மிகவும் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படும் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருக்கோவிலூர்-கடலூர் பிரதானச் சாலையில் அமைந்துள்ள எல்ராம்பட்டு பஸ் நிறுத்தத்தில், 15 ஆண்டுகளுக்கு முன் பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது.
இப்பகுதி மக்களுக்கு மிகவும் பயனாக இருந்து வரும் இந்த நிழற்குடை 3 ஆண்டுகளுக்கும் மேலாக பழுதடைந்த நிலையில் உள்ளது.
குறிப்பாக அதன் மேற்கூரை பாதி அளவுக்கு இடிந்து விழுந்துள்ளது. மீதமுள்ள மேற்கூரை எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் பயணிகள் இந்த நிழற்குடையை பயன்படுத்துவதில்லை. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர் பயணிகள்.
இனியாவது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து இந்த நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


