பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக இருவரும் ஞாயிற்றுக்கிழமை தனித்தனியே வெளியிட்ட அறிக்கை:
ராமதாஸ்: பெட்ரோல், டீசல் விலை என்ற பெயரில் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மத்திய அரசு மீண்டும் ஒரு தாக்குதலை தொடுத்துள்ளது.
ரூபாய் மதிப்பு குறைந்ததன் காரணமாகவே பெட்ரோலிய பொருள்களின் விலைகள் உயர்த்தப் பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியிருக்கிறது.
ரூபாய் மதிப்பு குறைந்ததற்கு மத்திய அரசின் தவறான கொள்கைகளும், பெரு நிறுவனங்களுக்கு லட்சக்கணக்கான கோடி ரூபாயை ஊக்குவிப்பு என்ற பெயரில் வாரி வழங்கியதும்தான் காரணமாகும். மத்திய அரசின் தவறுகளால் ஏற்பட்ட விளைவுகளுக்காக ஏழை மற்றும் நடுத்தர மக்களைத் தண்டிப்பது கண்டிக்கத்தக்கதாகும்.
வைகோ: பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் மீண்டும் உயர்த்தி மக்கள் மீது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு தாக்குதல் நடத்தி வருகிறது.
தாறுமாறான விலைவாசி உயர்வால் ஏழை, எளிய நடுத்தர மக்கள் கடும் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நிலையில், காங்கிரஸ் அரசு மக்கள் மீது சம்மட்டி அடி கொடுப்பதுபோல் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இது கண்டனத்துக்குரியது. இந்த விலை உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


