சேது சமுத்திரத் திட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் உள்ள வழக்கில், தமிழக அரசு தாக்கல் செய்துள்ள மனுவுக்கு பதில் அளிக்கும் வகையில் விரைவில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும் என்றார் மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே. வாசன்.
தஞ்சாவூரில் அவர் அளித்த பேட்டி: நிகழாண்டு பிப்ரவரி மாதம் சேது சமுத்திரத் திட்டம் தொடங்கும் வகையில், மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்தது. இந்தத் திட்டத்துக்கு இடையூறாக பல்வேறு சந்தேகங்களை எழுப்பி, தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் மூன்று வாரங்களில் வரவுள்ளது. அதற்கு முன்பு தமிழக அரசு கூறியுள்ள தவறான காரணங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யும்.
சேது சமுத்திரத் திட்டம் தென் மாவட்ட மக்களின் கனவு திட்டம். தமிழகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்ல, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும் மிக முக்கியமான திட்டம். இந்தத் திட்டத்தை உறுதியோடு செயல்படுத்த வேண்டும் என மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சர்வதேச அளவில் வளர்ந்த நாடுகள் கூட பொருளாதாரத்தில் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், நம் நாட்டைப் பொருத்தவரை, இத்தகைய பொருளாதார வீழ்ச்சியில் இருந்து வெளிவருவது என்பது கடினமானது. இதனால், இந்தத் தாக்கம் ரூபாய் மதிப்பு வீழ்ச்சியில் தெரிகிறது. என்றாலும், கடுமையான பொருளாதார சீர்திருத்தம் காரணமாக விரைவில் இந்தத் தாக்கம் குறையும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்வு காரணமாக கட்டாயமான சூழ்நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை 12 முறை குறைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பா.ஜ.க.வினர் மக்களைக் குழப்பிக் கொண்டிருக்கின்றனர்.
மீண்டும் இந்தியாவின் நிலையை உறுதி செய்து, 2014 ஆம் ஆண்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று, மூன்றாவது முறையாக காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி அமையும் என்றார் வாசன்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi


