மதுரை அருகே ஞாயிற்றுக்கிழமை காலை காரும் தனியார் பஸ்ஸூம் மோதிக் கொண்டதில், கணவன், மனைவி மற்றும் அவர்களின் பேத்தி ஆகியோர் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்தனர்.
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரத்தைச் சேர்ந்த விவசாயி மாரிமுத்து (67). இவரது மனைவி தனவதி (63). இவர்களுக்கு 3 மகன்கள். இதில் கடைசி மகன் அம்மையப்பன் சென்னையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் பிரியஷா (8), மகன் பிரதீப் (5). அம்மையப்பன் வியத்நாம் சென்றுள்ளார். இதையடுத்து, பிரியஷா, பிரதீப் ஆகியோர் தாத்தா, பாட்டியைப் பார்க்க தளவாய்புரம் வந்துள்ளனர்.
ஞாயிற்றுக்கிழமை இரவு அம்மையப்பன் வெளிநாட்டிலிருந்து சென்னைக்குத் திரும்புவதை அடுத்து, பிரியஷாவையும், பிரதீப்பையும் சென்னைக்கு காரில் மாரிமுத்துவும், அவரது மனைவி தனவதியும் அழைத்துச் சென்றுள்ளனர். காரை தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் ஓட்டியுள்ளார்.
மதுரை நான்கு வழிச் சாலையில் யா.ஒத்தக்கடை அருகே கார் வந்துகொண்டிருந்தது. அப்போது மேலூரில் இருந்து மதுரை நோக்கிவந்த தனியார் பஸ்ஸூம், காரும் மோதிக் கொண்டன. இதில் பஸ்ஸின் அடிப்பகுதியில் கார் சிக்கி, பலத்த சேதமடைந்தது.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த மாரிமுத்து, தனவதி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த சிறுமி பிரியஷா, பிரதீப் மற்றும் ஓட்டுநர் விஜயகுமார் ஆகியோர் தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். ஆனால், சிறுமி பிரியஷா வழியிலே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து, விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக அதிகரித்தது.
பஸ்ûஸ கிரேன் மூலம் தூக்கிய பிறகே காரில் சிக்கியவர்களை மீட்க முடிந்தது. விபத்தில் சாலை சந்திப்பில் இருந்த உயர்நிலை மின்விளக்கு கம்பமும் சேதமடைந்தது.
விபத்து குறித்து யா.ஒத்தக்கடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து, தனியார் பஸ் ஓட்டுநர் அருக்கம்பட்டி பிரபாகரனைக் கைதுசெய்து விசாரித்து வருகின்றனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

