தமிழகம் மற்றும் புதுச்சேரியின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்துக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இடியுடன் மழை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வெப்பச் சலனம் காரணமாக சில நாள்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது, கடலோரப் பகுதிகளில் கனமழை பெய்யக் கூடும் எனவும், பல்வேறு இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பலத்த காற்று வீசும்: வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோரப் பகுதிகளில் மேற்கு மற்றும் வடமேற்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலமான தரைக்காற்று வீசும்.
இதுபோல் தென் தமிழக கடலோரப் பகுதிகளில் தென்மேற்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் பலமான தரைக்காற்று வீசும் என மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மழை அல்லது இடியுடன்கூடிய மழை பெய்யும்.
ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி வரை பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்):
மேட்டுப்பட்டி (மதுரை மாவட்டம்) - 50, திருச்சி - 40, கரூர் பரமத்தி, சேலம், வாடிப்பட்டி, சோழவந்தான் (மதுரை மாவட்டம்), மணப்பாறை, ஏற்காடு, இழுப்பூர், புதுக்கோட்டை, திருவாரூர், மருங்காபுரி (திருச்சி மாவட்டம்), தஞ்சாவூர், - 30, விருத்தாச்சலம் - 160, சங்கராபுரம் (விழுப்புரம் மாவட்டம்), புதுச்சேரி - 80, அரியலூர், கீரனூர் (புதுக்கோட்டை மாவட்டம்), கடலூர் - 60, கடவூர், திருவிடைமருதூர், கரூர், சிவகாசி, திருமங்கலம், ஆடுதுறை, பாபநாசம் - 20, விராலிமலை (புதுக்கோட்டை), காரைக்கால், நத்தம், பென்னகரம், லால்குடி, ஸ்ரீவில்லிபுத்தூர், சாத்தூர் - 10.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

