பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளதற்கு திமுக தலைவர் கருணாநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வியாழக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பெட்ரோல், டீசல் விலையை அடிக்கடி உயர்த்துவதால் சங்கிலித் தொடர்போல் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை மத்திய ஆட்சியாளர்கள் தெரிந்து செய்கிறார்களா, தெரியாமல் செய்கிறார்களா என்று புரியவில்லை.
பெட்ரோல், டீசல் விலையைத் தொடர்ந்து உயர்த்துவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
இலங்கையின் வடக்கு மாகாணத்தில் தமிழ்த் தேசிய கூட்டணி ஆட்சியைப் பிடித்தாலும், நிலம் மற்றும் போலீஸ் அதிகாரம் வழங்கப்படாது என்று ராஜபட்ச கூறியுள்ளார்.
இலங்கை அரசு தாங்கள் நினைத்தால் எதையும் செய்யலாம் என்ற மனப்பான்மையோடுதான் செயல்படுகிறது என்பது தெளிவாகிறது.
மத்திய அரசுதான் இதைப் பற்றி உடனடியாக அக்கறையோடு நடவடிக்கை எடுத்து மீனவர்களையும் இலங்கைத் தமிழர்களையும் காக்க முன்வர வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
ராமதாஸ்: பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்தியதன் மூலம் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் மீது மேலும் ஓர் இடியை இறக்கியிருக்கிறது மத்திய அரசு.
6 மாதங்களாகவே டீசல் விலையை மத்திய அரசு தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இது கடுமையாக கண்டிக்கத்தக்கது.
இந்த விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.
வைகோ: ஜனவரி மாதத்தில் இருந்து 7-ஆம் முறையாக டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசின் பொருளாதாரக் கொள்கைகளால் ரூபாயின் மதிப்பு சரிந்துகொண்டே போகிறது. அதனைச் சீர்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக் கொண்டே போவதை ஏற்கமுடியாது.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

