முதல்வர் பற்றி கேப்டன் டிவியில் அவதூறு செய்தி வெளியிட்டது தொடர்பாக கேப்டன் டிவியின் நிறுவனத் தலைவர் பிரேமலதா விஜயகாந்த் செப்டம்பர் 2 -ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக சென்னை முதன்மை நீதிமன்றம் உத்தரவிட்டது.
தமிழக முதல்வர் ஜெயலலிதா பற்றி தவறான செய்தி கேப்டன் டிவியில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி ஒளிபரப்பப்பட்டதாம். அது முதல்வரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இருந்ததாக புகார் எழுந்தது.
இது தொடர்பாக கேப்டன் டிவி நிறுவனத் தலைவர் பிரேமலதா விஜயகாந்த், நிர்வாக இயக்குநர் எல்.கே.சுதீஷ், செய்தி வாசிப்பாளர்கள் கிரிஜா ரவிசங்கர், சிங்காரவேலன். செம்மலர் ரமேஷ் ஆகியோர் மீது தமிழக அரசு சார்பில் மாநகர அரசு வழக்குரைஞர் எம்.எல்.ஜெகன் மற்றும் கூடுதல் அரசு வழக்குரைஞர் எம்.கே.அசோகன் ஆகிய இருவரும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஜி.சொக்கலிங்கம் முன்பு வியாழக்கிழமை (ஆகஸ்ட் 1) விசாரணைக்கு வந்தது. மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி, பிரேமலதா விஜயகாந்த் உள்பட 5 பேரும் வரும் செப்டம்பர் 2-ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டார்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

