தமிழகத்தில் உள்ள நான்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு மத்திய அரசின் விருது கிடைத்துள்ளதாக கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு தெரிவித்தார்.
சென்னையில் கூட்டுறவு சங்கத் தலைவர்களுக்கான பயிற்சியை வியாழக்கிழமை தொடங்கிவைத்து அவர் பேசியது:
பதினாறாவது இந்திய கூட்டுறவு காங்கிரஸ் கூட்டம் அண்மையில் புது தில்லியில் நடைபெற்றது. இந்திய அளவில் 7 ஆயிரத்து 202 வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் உள்ளன. அதில், தமிழகத்துக்கு மட்டும்தான் ஒரு கூட்டுறவு விற்பனை இணையம் மற்றும் மூன்று கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் சிறந்த சங்கங்களாக தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
சென்னையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம், பொள்ளாச்சி வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம், பட்டுக்கோட்டை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம், உடுமலைப்பேட்டை வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கம் ஆகிய சங்கங்களுக்கு விருதுகள் கிடைத்துள்ளன என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்தார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

