சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

ஆழியார் அணையிலிருந்து இன்று தண்ணீர் திறப்பு: முதல்வர் உத்தரவு

கோவை மாவட்டம் ஆழியார் அணையிலிருந்து பாசனத்துக்கும், பொள்ளாச்சி நகர குடிநீர்த் தேவைக்கும் திங்கள்கிழமைமுதல் (ஜூலை 22) தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

Updated On :22 ஜூலை 2013, 4:42 am

கோவை மாவட்டம் ஆழியார் அணையிலிருந்து பாசனத்துக்கும், பொள்ளாச்சி நகர குடிநீர்த் தேவைக்கும் திங்கள்கிழமைமுதல் (ஜூலை 22) தண்ணீர் திறந்துவிட முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

ஆழியார் அணையின் பழைய வாய்க்கால் பாசனப் பகுதிகளுக்கு முதல் போக பாசனத்துக்காகவும், பொள்ளாச்சி நகர குடிநீர்த் தேவைக்காகவும் தண்ணீர் திறந்துவிடுமாறு ஆழியார் பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்கத்தினர், விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.

அவர்களின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டுள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.