இந்த ஆண்டு (2013-2014) ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு அறிவிக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் அடுத்த ஆண்டுக்குள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் ராகேஷ் மிஸ்ரா தெரிவித்தார்.
சென்னை லலித் கலா அகாதெமியில் இந்திய ரயில்வேயின் 160-வது ஆண்டு விழாவை முன்னிட்டு சாதனைகளை விளக்கும் புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்து புதன்கிழமை அவர் பேசியதாவது:
2013-2014 ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 14 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அதில் இப்போது 6 புதிய ரயில்கள் இயக்கப்பட்டுவிட்டன. எஞ்சிய ரயில்கள் 2014-ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் இயக்கப்படும்.
இந்தியாவிலுள்ள ரயில் பாதையின் மொத்த நீளம் 63 ஆயிரம் கிலோ மீட்டர்களாகும். இதில் தினமும் 14,444 ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ரயில்வே முதன்முதலில் 1853-ல் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
1947-ஆம் ஆண்டு இந்தியச் சுதந்திரத்தின்போது மொத்தம் 42 ரயில் அமைப்புகள் இருந்தன. அவை 1951-ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டு ஒன்றிணைக்கப்பட்டபோது உலகின் மிகப்பெரிய வலையமைப்புகளில் ஒன்றாக உருவானது. இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் இப்போது ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீர் மாநிலத்துக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது என்றார் ராகேஷ் மிஸ்ரா.
இந்திய ரயில்வேயின் புகழ் மிக்க தருணங்களையும், ரயில்வேயின் படிப்படியான முன்னேற்றமும் அடங்கிய சுமார் 205 அரிய புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
இந்த புகைப்படங்கள் சென்னை, பெங்களூர், ஹைதராபாத், தில்லி, கொல்கத்தா ஆகிய இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டுள்ளன.
இந்தக் கண்காட்சி பொதுமக்கள் பார்வைக்காக ஜூலை 11-ஆம் தேதியில் இருந்து ஜூலை 16-ஆம் தேதி வரை நடைபெறும். இந்தக் கண்காட்சிக்கு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. இந்த அரிய புகைப்படக் கண்காட்சியை பொதுமக்கள் காலை 11 மணியில் இருந்து இரவு 7 மணி வரை கண்டுகளிக்கலாம்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

