சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். கலந்தாய்வு ஒத்திவைப்பு

தமிழகத்தில் சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Updated On :12 ஜூலை 2013, 9:55 am

தமிழகத்தில் சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஆகஸ்ட் முதல் வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சுயநிதி அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடத்துக்கு ஏற்கெனவே ஜூலை 15-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட கலந்தாய்வு பல்வேறு காரணங்களால் இப்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களை நிரப்ப கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கத்தில் கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 22-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற்றது. கலந்தாய்வில் பங்கேற்று

சேர்க்கை கடிதம் பெற்ற 1,823 மாணவர்களில், 2 பேர் மட்டுமே பி.இ. படிப்பில் சேர்ந்துள்ளனர்.

சேர்க்கை கடிதம் பெற்ற மாணவர்கள் அனைவரும் உரிய அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கு வரும் 24-ஆம் தேதி செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஏற்படும் காலியிடங்கள் குறித்த விவரம் இந்த மாத இறுதியில் தெரிய வரும்.

சுயநிதி மருத்துவக் கல்லூரிகளின் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு 900-த்துக்கும் மேற்பட்ட எம்.பி.பி.எஸ். இடங்கள் கிடைக்கும். எனினும் சில சுயநிதி மருத்துவக் கல்லூரிகளுக்கு

சில குறைபாடுகளைச் சுட்டிக் காண்பித்து, நடப்புக் கல்வி ஆண்டில் மாணவர்களைச் சேர்ப்பதற்கு இந்திய மருத்துவக் கவுன்சில் அனுமதி மறுத்துள்ளது; தடையை நீக்கும் முயற்சிகளை சுயநிதி மருத்துவக் கல்லூரி நிர்வாகங்கள் மேற்கொண்டுள்ளன.

இதனால் சுயநிதி மருத்துவக் கல்லூரிகள் மூலம் அரசு ஒதுக்கீட்டுக்கு எத்தனை இடங்கள் சமர்ப்பிக்கப்படும் என்ற விவரம் மருத்துவக் கல்வி தேர்வுக் குழுவுக்குக் கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெற உள்ளது.

சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றின் மூலம் கிடைக்கும் கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களுக்கு இந்திய மருத்துவக் கவுன்சிலின் இறுதிக் கட்ட அனுமதிக்காக மருத்துவக் கல்வி தேர்வுக் குழு காத்திருக்கிறது.

எனவே அரசு மருத்துவக் கல்லூரிகளில் காலியாகும் எம்.பி.பி.எஸ். இடங்கள் மற்றும் மேலே குறிப்பிட்ட கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்கள், சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள், சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூரியில் உள்ள பி.டி.எஸ். இடங்கள், சுயநிதி அரசு பி.டி.எஸ். இடங்கள் ஆகியவற்றுக்கு ஆகஸ்ட் முதல் வாரம் கலந்தாய்வை நடத்த மருத்துவக் கல்வி தேர்வுக் குழு திட்டமிட்டுள்ளது.