சிறுநீரக விற்பனை மோசடி வழக்கு தொடர்பாக கும்மிடிப்பூண்டியைச் சேர்ந்த மேலும் ஓர் இடைத்தரகர் புதன்கிழமை கைது செய்யப்பட்டார்.
சிறுநீரக விற்பனை மோசடி தொடர்பாக இடைத்தரகர்கள் உள்ளிட்ட 10 பேர் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ளனர். சேலத்தைச் சேர்ந்த மருத்துவர் கணேசன் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஹரிபாஸ்கரை காவலில் எடுத்து கடந்த 2 நாள்களாக சிபிசிஐடி போலீஸார் விசாரித்தனர்.
அவர் அளித்த தகவலின்படி, திருவள்ளூர் மாவட்டம் சென்ற தனிப் படையினர் கும்மிடிப்பூண்டியில் தங்கியிருந்த ராமச்சந்திரனை (65) புதன்கிழமை கைது செய்தனர். குடும்ப வறுமையால் தனது சிறுநீரகத்தை பல ஆண்டுகளுக்கு முன்பு விற்பனை செய்த ராமச்சந்திரன், அதன் பின்னர் சிறுநீரக விற்பனை செய்யும் இடைத்தரகராக மாறினாராம்.
ராமச்சந்திரன் மூலம் 10-க்கும் மேற்பட்ட சிறுநீரகங்கள் பெறப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

