நெய்வேலி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதை கைவிடக் கோரி புதன்கிழமை இரவு முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்டச் செயலர் எம்.சேகர் தெரிவித்தார்.
பண்ருட்டியில் திங்கள்கிழமை அவர் செய்தியாளர்களிடம் கூறியது: நெய்வேலி நிறுவன பங்கு விற்பனையை கைவிடக் கோரி புதன்கிழமை இரவு முதல் போராட்டம் தொடங்க உள்ளது.
ஏ.ஐ.டி.யூ.சி. ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13 ஆயிரம் பேர் போராட்டத்தில் பங்கேற்பர்.
நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானாவில் இருந்து பேரணி புறப்பட்டு 8 ரோடில் முடிவடைந்ததும் போராட்டம் அறிவிக்கப்படும்.
மாநிலத் தலைவரும், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான சுப்புராயன், பொதுச்செயலர் டி.எம்.மூர்த்தி ஆகியோர் பங்கேற்கவுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டத் தலைநகர்களில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். கடலூரில் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு நடக்கவுள்ள ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் மாரியப்பன் தலைமை வகிப்பார்.
இதில் வங்கி, தொலைத்தொடர்பு துறை, ஆசிரியர்கள், தொழிற்சங்கத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்பர் எனக் கூறினார்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

