தினமணி - நெய்வேலி புத்தகக் கண்காட்சிக் குழு இணைந்து நடத்திய கட்டுரைப் போட்டிகளின் முடிவுகள் திங்கள்கிழமை வெளியிடப்பட்டன.
இந்த ஆண்டுக்கான கட்டுரைப் போட்டியில் பங்கேற்ற கட்டுரைகளில் பரிசுக்குரியவற்றை என்எல்சி கல்வித் துறை முதன்மை மேலாளர் என்.ஜோதிக்குமார் தலைமையிலான குழுவினர் தேர்வு செய்தனர். அதன்படி பள்ளி மாணவர்களுக்கான பிரிவில் திருநெல்வேலியைச் சேர்ந்த தி.சு.பா.சந்துரு முதல் பரிசை தட்டிச்சென்றார். சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த நிகில் தீபிகா 2-வது பரிசுக்கும், சேலம் தாதகாபட்டியைச் சேர்ந்த அ.கு.நிஷா 3-ஆம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
இதைத் தவிர ஆறுதல் பரிசு வென்றவர்கள்: வே.பாலாஜி (மதுரை), ப.பவித்ரா (ஈரோடு), ச.பூர்ணிமா (கோவை), ச.மகாதேவன் (புதுச்சேரி), இ.கண்ணம்மாள் (திருநெல்வேலி).
ஆறுதல் பரிசு பெறும் நெய்வேலிப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள்: கே.ரக்ஷ்யா, ஆர்.எஸ்.ஸ்ரீராம், தி.காயத்ரி, எம்.கனகவேல்ஹரீஷ், இல.ஷியாம்குமார், ஆ.கதிரவன். கல்லூரி மாணவர்களுக்கான பிரிவில் பரிசு வென்றவர்கள்: திண்டுக்கல்லைச் சேர்ந்த சி.சிவா முதல் பரிசை தட்டிச் சென்றார். நாகை மாவட்டம், அரங்கக்குடியைச் சேர்ந்த க.நெüபாபேகம் 2-வது பரிசுக்கும், திருச்சி மாவட்டம் புள்ளம்பாடியைச் சேர்ந்த த.திருமூலநாதன் 3-ஆம் பரிசுக்கும் தேர்வு செய்யப்பட்டனர்.
ஆறுதல் பரிசு பெறுவோர் விவரம்: எம்.பிரதீபா (கொடைக்கானல்), பி.கமலா (மேற்கு அடுக்காம்பாளையம், கரூர்), வை.கல்பனா (மணப்பாறை), எஸ்.பார்த்தசாரதி (பெருந்துறை), மு.செந்தில்குமார் (கரூர்), க.சண்முகமணிகண்டன் (சங்கரன்கோவில்), கோ.சரண்யா (அம்மாப்பேட்டை, சேலம்), சி.அபிநயா (திருமலைகிரி, சேலம்), க.சுவேதா (நெய்வேலி), எஸ்.சிவாபாண்டியன் (பெரியமேடு, சிதம்பரம் வட்டம்), க.காயத்ரி (மண்ணிவாக்கம், சென்னை).
தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 12-ஆம் தேதி நடைபெறும் விழாவின்போது புத்தகக் கண்காட்சி குழுவினரால் பரிசு வழங்கப்படும்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

