சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் முதுநிலை பல் மருத்துவப் படிப்பு (எம்.டி.எஸ்.) கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூலை 2) நடைபெறுகிறது.
சென்னை பாரிமுனை அரசு பல் மருத்துவக் கல்லூயில் உள்ள பல்வேறு முதுநிலை மருத்துவப் படிப்பின் பல பிரிவுகளின் 20 இடங்கள் மற்றும் சுயநிதி கல்வி நிறுவனங்களின் 34 எம்.டி.எஸ். இடங்களை நிரப்ப கலந்தாய்வு நடைபெறுகிறது.
சுயநிதி நிறுவனங்களைப் பொருத்தவரை சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம், சென்னை ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரி, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரம் ஸ்ரீ மூகாம்பிகை பல் மருத்துவக் கல்லூரி, கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பல் மருத்துவக் கல்லூரியிலிருந்து கிடைத்துள்ள 34 அரசு ஒதுக்கீட்டு எம்.டி.எஸ். இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.
அரசு ஒதுக்கீட்டு எம்.டி.எஸ். இடத்தைப் பொருத்தவரை "பாராகிளினிக்கல்' பாடப் பிரிவின் கல்விக் கட்டணம் இப்போது ஆண்டுக்கு ரூ.1.25 லட்சமாகவும், "கிளினிக்கல்' பாடப் பிரிவின் கட்டணம் ரூ.1.75 லட்சமாகவும் உள்ளது; இந்த கல்விக் கட்டணத்தை நீதிபதி குழு ஓரளவு உயர்த்தியுள்ளதாகத் தெரிகிறது.
ஆர்ப்பாட்டம்: சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து சுயநிதி பல் மருத்துவக் கல்லூரிகளிலிருந்தும் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டுக்குப் பெற தவறி விட்டதாகக் கூறி கீழ்ப்பாக்கத்தில் கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 20) ஆர்ப்பாட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாக எம்.டி.எஸ். ரேங்க் பட்டியலில் இடம்பெற்றுள்ள டாக்டர்கள் தெரிவித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

