வேலூரில் இந்து முன்னணியின் மாநிலச் செயலர் சு.வெள்ளையப்பன் (47) வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள முத்து மண்டபம் பின்புறம் ராமகிருஷ்ண மடத்துக்கு அருகே சாலையோரப் பள்ளத்தில் இவர் வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தது திங்கள்கிழமை பிற்பகல் தெரியவந்தது.
அவரது தலை மற்றும் உடலில் பல இடங்களில் பலமான வெட்டுக் காயங்கள் இருந்துள்ளன. எனவே, கொலை செய்ய வந்தவர்களிடம் அவர் கடுமையாகப் போராடியிருக்கலாம் என்றும் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல் இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது.
தகவலின்பேரில் வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் மற்றும் போலீஸôர் அங்கு சென்று, விசாரணை நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தைச் சேர்ந்த சு.வெள்ளையப்பன், திருமணமாகாதவர். இந்து முன்னணியின் முழுநேர ஊழியராவார்.
இந்து முன்னணியினர் மறியல்: வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டதை அறிந்த இந்து முன்னணியினர், புதிய பஸ் நிலையம் அருகே திரண்டு குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதைத் தொடர்ந்து காட்பாடி சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர். இதனால் அண்ணா பாலம் வழியாக காட்பாடிக்கு வாகனங்கள் செல்ல முடியவில்லை. எனவே வாகனங்கள் புதிய பஸ் நிலையத்துக்குள் திருப்பி விடப்பட்டன. அங்கும் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இதைத் தொடர்ந்து, இந்து முன்னணியினருக்கும் போலீஸôருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
5 பஸ்கள் மீது கற்கள் வீச்சு: இதற்கிடையே வேலூர் புதிய பஸ் நிலையத்துக்குள் இருந்த 2 அரசு பஸ்களும் பஸ் நிலையத்துக்கு வந்த 3 அரசு பஸ்களும் கல்வீசித் தாக்கப்பட்டதில் அவற்றின் கண்ணாடிகள் நொறுங்கின.
வெள்ளையப்பனின் சடலத்தை ஏற்றிச் செல்ல வந்த தனியார் ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடியும் அடித்து நொறுக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, காட்பாடி செல்லும் சாலையிலிருந்து ஊர்வலமாகச் சென்ற இந்து முன்னனியினர் கிரீன் சர்க்கிள் பகுதியில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனால் பஸ்கள், வாகனங்கள் எந்த வழியாகவும் செல்லமுடியாமல் ஸ்தம்பித்து நின்றன. அதனால் சுமார் ஒன்றரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இன்று பந்த்: வெள்ளையப்பன் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து இந்து முன்னணி சார்பில் செவ்வாய்க்கிழமை பந்த் நடத்த இருப்பதாகவும், அதற்கான பணியை மேற்கொள்ள வேண்டியிருப்பதால் மறியலைக் கைவிட்டு அங்கிருந்து வெள்ளையப்பனின் சடலம் வைக்கப்பட்டுள்ள அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனைவரும் செல்லலாம் என்றும் இந்து முன்னனி நிர்வாகிகள் தெரிவித்ததன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
அதன் பிறகே போக்குவரத்து சீரானது. அந்தப் பகுதியில் பதற்றம் நிலவுவதால் பாதுகாப்புக்காக ஏராளமான போலீஸôர் குவிக்கப்பட்டுள்ளனர்.
போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர்
வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயிலை இந்து சமய அறநிலையத் துறை கையகப்படுத்துவதாக அண்மையில் அறிவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கோயிலை மீண்டும் ஜலகண்டேஸ்வரர் தரும ஸ்தாபனத்திடமே ஒப்படைக்க வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புகளை ஒருங்கிணைத்து போராட்டங்களைத் தொடங்கியவர் சு.வெள்ளையப்பன்.
சம்பவம் நடந்த திங்கள்கிழமை காலை ஜலகண்டேஸ்வரர் கோயிலில், கோயிலை மீட்பதற்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. அந்தப் பிரார்த்தனையை நண்பகலில் முடித்துக் கொண்டு முத்து மண்டபம் பின்புறம் உள்ள ராமகிருஷ்ண மடத்துக்கு அவர் வந்துள்ளார். அங்கு அவரைப் பின்தொடர்ந்து வந்த நபர்கள் வெட்டி படுகொலை செய்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

