சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மேலூரில் கிரானைட் மெருகூட்டும் ஆலை

மதுரை மாவட்டம், மேலூரில் கிரானைட் மெருகூட்டும் ஆலையை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

Updated On :22 ஜூன் 2013, 8:42 am

மதுரை மாவட்டம், மேலூரில் கிரானைட் மெருகூட்டும் ஆலையை முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:

மதுரை மாவட்டம், மேலூரில் தமிழ்நாடு கனிம நிறுவனத்தால் ரூ.34.25 கோடி மதிப்பில் நிறுவப்பட்டுள்ள கிரானைட் கற்பலகை மெருகூட்டும் தொழிற்சாலையை காணொலிக் காட்சி மூலமாக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தமிழ்நாடு கனிம நிறுவனத்தின் சார்பில் மதுரை மாவட்டம், மேலூர் அருகில் கருத்தம்புளியம்பட்டி கிராமத்தில் ஆண்டுக்கு சுமார் ஒரு லட்சத்து 80 ஆயிரம் சதுர மீட்டர் அளவுள்ள 2 செ.மீ. மற்றும் 3 செ.மீ. கனமுடைய கற்பலகைகளை மெருகூட்டி பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யக்கூடிய வகையில் உலகத் தரத்திலானமெருகூட்டப்பட்ட கிரானைட் கற்பலகைகள் தயாரிக்கும் தொழிற்சாலை ரூ.34.25 கோடியில் நிறுவப்பட்டுள்ளது.

இந்த தொழிற்சாலையில் சுற்றுச்சூழல் மாசுபடுத்தாத நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கற்பலகைகளை மெருகூட்டும் இயந்திரங்கள் ரூ.18 கோடி மதிப்பீட்டில் இத்தாலி நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளன.

இந்த தொழிற்சாலைக்குத் தேவையான கிரானைட் கற்கள் தமிழ்நாடு கனிம நிறுவனத்திற்குச் சொந்தமான கீழவளவு, கீழையூர், திருத்தங்கல், தெற்கு கல்லிடைக்குறிச்சி, நாகனூர், தோகமலை போன்ற குவாரிகளிலிருந்து பெறப்படும். இங்கு தயாரிக்கப்படும் மெருகூட்டப்பட்ட கிரானைட் கற்பலகைகளின் விற்பனை மதிப்பு ஆண்டிற்கு சுமார் ரூ.40 கோடியாகும்.

இந்தத் தொழிற்சாலையில் தயாரிக்கப்படும் கிரானைட் கற்பலகைகள் அமெரிக்கா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இதன்மூலம் நாட்டிற்கு கணிசமான அந்நியச் செலாவணி ஈட்டப்படும்.

இந்த தொழிற்சாலை மூலம் சுமார் 100 பேருக்கு நேரடியாகவும், 200 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு ஏற்படும். இத்தொழிற்சாலை ஆண்டுக்கு சுமார் ரூ. 4 கோடி அளவிற்கு லாபம் ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிகழ்ச்சியில், தொழில் துறை அமைச்சர் தங்கமணி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தொழில் துறை முதன்மைச் செயலாளர் என்.எஸ்.பழனியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.