நாமக்கல் மாவட்டம், பரமத்திவேலூர் அருகே வெள்ளிக்கிழமை பாலத்தில் கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த 3 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி நரசிம்மர் கோயிலைச் சேர்ந்த மனோகரன் மகன் பாலாஜி (40). இவரும், அதே பகுதியைச் சேர்ந்த சிவஞானம் மகன் சிவசங்கர் (42) ஆகிய இருவரும் திருத்தணி முருகன் கோயில் பகுதியில் பஞ்சாமிர்தக் கடை நடத்தி வருகின்றனர்.
இவர்களுடன், திருத்தணி நரசிம்மர் கோயில் தெருவைச் சேர்ந்த சம்பத் (55) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் (50) ஆகிய நான்கு பேரும், வெல்லம் வாங்குவதற்காக காரில் திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்திற்கு வந்தனர்.
சென்னை ஆவடி களிமேடு பகுதியைச் சேர்ந்த ராஜன் மகன் பாலாஜி (40) காரை ஓட்டி வந்தார்.
வெள்ளிக்கிழமை நாமக்கல் மாவட்டம், கீரம்பூர் சுங்கச் சாவடி அருகேயுள்ள புலவர்பாளையம் பாலத்தில் கார் வந்து கொண்டிருந்த போது, கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் சுவர் மீது மோதிக் கவிழ்ந்தது. இதில், காரில் இருந்த 5 பேரும் பலத்த காயமடைந்தனர். உடனடியாக அவர்கள் தேசிய நெடுஞ்சாலை அவசர ஊர்தி மூலம் நாமக்கல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
அங்கு கார் ஓட்டுநர் பாலாஜியும், திருத்தணியைச் சேர்ந்த சம்பத்தும் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த மற்றொரு பாலாஜி, ஆனந்தன், சிவசங்கர் ஆகியோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

