கடும் வறட்சி காரணமாக, செஞ்சி நகரில் 10 தினங்களுக்கு ஒரு முறை குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அந்த விநியோகமும், நகர மக்களின் தேவையை பூர்த்தி செய்ய முடியாததால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே, புதிய குடிநீர் திட்டத்தை பயன்பாட்டிற்கு கொண்டுவர மக்கள் வலியுறுத்துகின்றனர்.
மழைக்காலங்களில், செஞ்சி நகரில், 2 தினங்களுக்கு ஒரு முறை என விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர், தற்போது கடும் வறட்சி காரணமாக, 10 தினங்களுக்கு ஒரு முறை விநியோகிக்கப்படுகிறது. வார்டு வாரியாக சுழற்சி முறையில் விநியோகம் நடைபெறுவதால், அந்த குடிநீர் கூட அனைவருக்கும் கிடைக்காத நிலை உள்ளது. இதனால் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது.
ஏமாற்றமளிக்கும் கூட்டுக் குடிநீர்த் திட்டம்: கடந்த 25 ஆண்டுக்கு முன்பு, செஞ்சி நகர குடிநீர் தேவைக்காக அனந்தபுரம், செஞ்சி கூட்டுக் குடிநீர்த் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம், திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் இருந்து குடிநீர் பெறப்பட்டு செஞ்சி பேரூராட்சி மூலம் விநியோகம் நடைபெற்றது.
இத்திட்டத்தில், வழியில் உள்ள பனமலைபேட்டை, பனமலை, அனந்தபுரம், கண்டாச்சிபுரம், உள்ளிட்ட 13 ஊர்களில் குடிநீர் விநியோகிக்கப்படுவதால் கடைசியாக செஞ்சிக்கு வந்து சேரும் நீர் போதுமானதாக இல்லை.
மந்த கதியில் புதிய திட்டம்: இதையடுத்து செஞ்சி நகருக்காக, ரூ.15 கோடி மதிப்பீட்டில் புதிய குடிநீர்த் திட்டத்திற்கு, 2.8.2007-ல் அடிக்கல் நாட்டப்பட்டது. இதற்காக, தனி இணைப்பு மூலம் திருக்கோவிலூர் தென்பெண்ணையாற்றில் தண்ணீர் பெற்று விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கின. ஆனால், மந்தகதியில் பணிகள் நடைபெறுவதால், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் இந்த திட்டத்தை செஞ்சி பேரூராட்சியில் இன்னும் ஒப்படைக்கவில்லை. இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்தை கேட்டால் இன்னும் சில மாதங்களில் புதிய குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என தெரிவிக்கின்றனர்.
வறண்ட குடிநீர் கிணறுகள்: பழைய கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் குடிநீர் பெறப்பட்ட 4 கிணறுகளில், 3 கிணறுகள் தற்போது வற்றிவிட்டன. ஒரு கிணற்றில் மட்டுமே தண்ணீர் பெறப்படுகிறது. அந்த தண்ணீரும் அனந்தபுரம் உள்ளிட்ட 13 கிராமங்களுக்கே போதுமானதாக இல்லை. தற்போது இந்த பழைய திட்டத்தின் மூலம் செஞ்சிக்கு குடிநீர் வரத்து தடைபட்டுள்ளது.
இதனிடையே புதிய குடிநீர் திட்டத்தில் தோண்டப்பட்ட 3 கிணறுகளில் 2 கிணறுகள் ள் வறட்சி காரணமாக வற்றிவிட்டன. ஒரு கிணற்றில் இருந்து, பயிற்சி முன்னோட்டமாக பெறப்படும் தண்ணீர் மட்டுமே தற்போது செஞ்சிக்கு விநியோகம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
பழைய கூட்டுக்குடிநீர் திட்டமும் கைகொடுக்காத நிலையில், புதிய குடிநீர் திட்டமும் செயல்பாட்டிற்கு வராததால் செஞ்சி நகரில் தற்போது குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. எனவே புதிய குடிநீர் திட்டத்தை உடனடியாக பயன்பாட்டிற்கு கொண்டு வர, நகர மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தொடர்புடையது

அதிகரிக்கும் மருத்துவச் செலவுகள்: நடுத்தர குடும்பங்கள் அதிகரிக்கும் பொருளாதார அழுத்தத்தை சந்திக்கிறதா?

கோவையில் வாக்கு எண்ணும் மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

