திருநெல்வேலி மாவட்டம், குற்றாலத்தில் சீசன் களைகட்டியுள்ளதைத் தொடர்ந்து பேரருவியில் வெள்ளிக்கிழமை தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டியது.
பகல் முழுவதும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மிதமான சாரல் மழை, வெயிலுமாக மாறிமாறி தட்ப வெப்பநிலை நிலவியது. குற்றாலம் ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் அதிகளவில் தண்ணீர் விழுகிறது. நாள் முழுவதும் குளிர்ந்த காற்று வீசியது. தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை நாள்கள் என்பதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை: இதற்கிடையே, பேரருவியில் வெள்ளிக்கிழமை இரவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையடுத்து சுற்றுலாப் பயணிகள் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.
தொடர் சாரல் மழை காரணமாக பேரருவியில் பாதுகாப்பு வளைவைத் தாண்டி தண்ணீர் கொட்டியது. இதனால் பேரருவியில் குளிக்க போலீஸார் தடை விதித்தனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

