தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் உள்ள 1,823 எம்.பி.பி.எஸ். இடங்களில் மாணவர்களைச் சேர்ப்பதற்கான முதல்கட்ட கலந்தாய்வு சனிக்கிழமை (ஜூன் 22) முடிவுக்கு வருகிறது.
சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி அரங்கில் கடந்த நான்கு தினங்களாக நடைபெற்ற கலந்தாய்வில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர 1,537 மாணவர்களுக்கு அனுமதிக் கடிதம் வழங்கப்பட்டது.
மொத்தம் உள்ள 18 அரசு மருத்துவக் கல்லூரிகளில் அனைத்துப் பிரிவினர் (ஓ.சி.), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பி.சி.), பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (எம்.பி.சி.) ஆகியோருக்கு உரிய அனைத்து எம்.பி.பி.எஸ். இடங்களும் நிரம்பிவிட்டன.
தாழ்த்தப்பட்ட வகுப்பினர் (எஸ்.சி.), தாழ்த்தப்பட்ட (அருந்ததி) வகுப்பினர் (எஸ்சிஏ), பழங்குடி வகுப்பினர் (எஸ்.டி.) ஆகியோருக்கு உரிய மொத்தம் 286 எம்.பி.பி.எஸ். காலியிடங்களை நிரப்ப இறுதியாக சனிக்கிழமை கலந்தாய்வு நடைபெறுகிறது.
ஜூலை 2-ஆவது வாரம்: சென்னை மருத்துவக் கல்லூரி, அரசு ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி, திருவண்ணாமலையில் செயல்பட உள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவை மூலம் கிடைக்க உள்ள 285 கூடுதல் எம்.பி.பி.எஸ். இடங்களில், தமிழக ஒதுக்கீட்டுக்கு உரிய கூடுதல் இடங்களுக்கான மறு ஒதுக்கீடு கலந்தாய்வு மற்றும் சுயநிதி அரசு எம்.பி.பி.எஸ். இடங்கள்-அரசு பி.டி.எஸ். இடங்கள்-சுயநிதி அரசு பி.டி.எஸ். இடங்களுக்கான கலந்தாய்வு ஜூலை 2-ஆவது வாரம் நடத்தப்படும் என்று மருத்துவக் கல்வி தேர்வுக் குழு ஏற்கெனவே அறிவித்துள்ளது.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

