சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

என்.எல்.சி. தலைவருக்கு சிறந்த அதிகாரி விருது

இந்த ஆண்டின் சிறந்த அதிகாரிக்கான விருதை என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகனுக்கு பியூரோகிரசி பிரபல ஆங்கில இதழ் வழங்கி கெளரவித்துள்ளது.

Updated On :22 ஜூன் 2013, 9:06 am

இந்த ஆண்டின் சிறந்த அதிகாரிக்கான விருதை என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகனுக்கு பியூரோகிரசி பிரபல ஆங்கில இதழ் வழங்கி கெளரவித்துள்ளது.

÷மத்திய மற்றும் மாநில அரசின் உயர் அதிகாரிகள் தொடர்பாக, புதுதில்லியிருந்து வெளியாகும் பியூரோகிரசி எனும் ஆங்கில இதழ் செய்திகள் வெளியிட்டு வருகிறது.

மேலும் அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் சாதனைகளைப் பாராட்டி விருது வழங்கி கெளரவித்து வருகிறது.

அதன்படி இவ்வாண்டின் சிறந்த பொதுத் துறை நிறுவனங்களையும், அந்நிறுவனங்களில் பணிபுரியும் அதிகாரிகளையும் தேர்வு செய்வதற்காக பிரமரின் ஆலோசகர் டி.கே.ஏ.நாயர் தலைமையில் அமைக்கப்பட்ட நடுவர் குழுவினர் என்எல்சி தலைவர் பி.சுரேந்திரமோகனை இவ்வாண்டின் சிறந்த அதிகாரியாக தேர்வு செய்தனர்.

இதற்கான விருது வழங்கும் விழா புதன்கிழமை புதுதில்லியில் நடைபெற்றது. இவ்விழாவில் ஹரியானா மாநில முதல்வர் புபிந்தர் சிங் ஹூடா, அருணாச்சல பிரதேச ஆளுநர் நிர்பாய் ஷர்மா, சட்டீஸ்கர் மாநில ஆளுநர் சேகர்தத் ஆகியோர் கலந்துகொண்டு என்எல்சி தலைவருக்கு சிறந்த அதிகாரிக்கான விருதை வழங்கி கெளரவித்தனர்.