சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

மன்னார்குடி-கோவை இடையேயான செம்மொழி விரைவு ரயில் சேவை தொடங்கியது

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து கோவை வரை செல்லும் செம்மொழி விரைவு ரயில் சேவையை மன்னார்குடியில் மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

Updated On :12 ஜூன் 2013, 7:53 am

திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியிலிருந்து கோவை வரை செல்லும் செம்மொழி விரைவு ரயில் சேவையை மன்னார்குடியில் மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ் செவ்வாய்க்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

மன்னார்குடி - கோவை இடையிலான செம்மொழி விரைவு ரயில் (வண்டி எண் 16615) மன்னார்குடியிலிருந்து நாள்தோறும் இரவு 8.10 மணிக்கு புறப்பட்டு நீடாமங்கலம், தஞ்சாவூர், திருச்சி, கரூர், ஈரோடு, திருப்பூர் வழியாக மறுநாள் அதிகாலை 5 மணிக்கு கோவை சென்றடையும்.

மறுவழித்தடத்தில் கோவை - மன்னார்குடி (வண்டி எண்-16616) விரைவு ரயில் நாள்தோறும் கோவையிலிருந்து இரவு 11.55 மணிக்கு புறப்பட்டு அதே வழித்தடத்தில் இயக்கப்பட்டு மறுநாள் காலை 7.55 மணிக்கு மன்னார்குடி வந்தடையும். இந்த

செம்மொழி விரைவு ரயில் சேவை ஜூன் 11-ம் தேதி தொடங்கும் என அண்மையில் ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இதன்படி, ரயில் சேவையின் தொடக்க விழா மன்னார்குடி ரயில் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்றது.

இதில் ரயில் சேவையை இரவு 8.10 மணிக்கு தனி மேடையிலிருந்து மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ், தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் மஞ்சுளாரங்கராஜன், கூடுதல் கோட்ட மேலாளர் எஸ்.ஏ.அப்துல்ரகுமான் ஆகியோர் கொடியசைத்து தொடங்கிவைத்தனர்.