சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

பொட்டுசுரேஷ் கொலை வழக்கு: மேலும் 2 பேருக்கு ஜாமீன்

பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Updated On :12 ஜூன் 2013, 7:44 am

பொட்டுசுரேஷ் கொலை வழக்கில் மேலும் 2 பேருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினராக இருந்த பொட்டுசுரேஷ் என்ற சுரேஷ்பாபு கடந்த ஜனவரி மாதம் மதுரையில் படுகொலை செய்யப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக திமுக பிரமுகர் அட்டாக்பாண்டியின் கூட்டாளிகள் 17 பேரை போலீஸார் கைது செய்தனர்.

இதில், சபாரத்தினம், சந்தானம், ஆரோக்கியபிரபு, விஜயபாண்டி உள்ளிட்ட 14 பேர் ஜாமீனில் வெளிவந்தனர். மேலும் காட்டுவாசி முருகன், வில்வதுரை ஆகியோரது ஜாமீன் மனுக்கள், மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் செவ்வாய்க்கிழமை விசாரிக்கப்பட்டது.

இதில் இருவருக்கும் ஜாமீன் வழங்கி நீதிபதி பி. கோகுல்தாஸ் உத்தரவிட்டார்.

இருவரும் திருச்சி நகர் காவல் நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலையில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.