சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

தீக்குச்சிகள் ஏற்றப்பட்ட கன்டெய்னரில் தீ

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை தீக்குச்சிகள் ஏற்றப்பட்ட கன்டெய்னரில் தீப்பிடித்து, 4 பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

Updated On :12 ஜூன் 2013, 8:02 am

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் செவ்வாய்க்கிழமை தீக்குச்சிகள் ஏற்றப்பட்ட கன்டெய்னரில் தீப்பிடித்து, 4 பெண்கள் உடல் கருகி உயிரிழந்தனர்.

கோவில்பட்டியில் தொழிற்பேட்டை பின்புறம் வடக்கு திட்டங்குளத்தில் பகுதிஇயந்திர தீப்பெட்டி ஆலை செயல்பட்டு வருகிறது.

செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணியளவில் மற்றொரு தீப்பெட்டி ஆலையிலிருந்து தீக்குச்சிகள் மினி லாரி மூலம் கொண்டுவரப்பட்டு, இந்த ஆலை வளாகத்தில் நிறுத்தப்பட்டதாம். அந்தத் தீக்குச்சிகளை பெட்டிகளில் அடைக்கும் பணிக்காக, மினி லாரியிலிருந்து ஆலை வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த கன்டெய்னரில் வைக்கும் பணி நடைபெற்றது. இப்பணியில் வடக்கு திட்டங்குளத்தைச் சேர்ந்த ராமையா மனைவி சுப்புலட்சுமி (54), மாரியப்பன் மகள் உமா (18), கோவில்பட்டி வ.உ.சி.நகரைச் சேர்ந்த சிவா மனைவி சுகந்தி (23), உருளைகுடியைச் சேர்ந்த தர்மராஜ் மனைவி பானுமதி (48) ஆகிய பெண்கள் ஈடுபட்டனர். அப்போது தீக்குச்சிகளில் உராய்வு ஏற்பட்டு திடீரென தீப்பிடித்தது. அடுத்த சில விநாடிகளில் தீக்குச்சிகள் ஒட்டுமொத்தமாகப் பற்றி எரியவே கன்டெய்னருக்குள் சிக்கிக்கொண்ட 4 பேரும் வெளியே வரமுடியாமல் உள்ளேயே கருகி இறந்தனர். இதற்கிடையே, தீக்குச்சிகள் இருந்த மினி லாரியிலும் தீப்பிடித்தது. தகவலறிந்தவுடன் தீயணைப்பு படையினர் சென்று, தீயை அணைத்து, 4 பேரது சடலங்களையும் மீட்டனர்.

இதுகுறித்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்து ஆலை மேலாளர்கள் பாரதிநகரைச் சேர்ந்த வீராசாமி (48), திலகர்நகரைச் சேர்ந்த முருகன் (42), காந்திநகரைச் சேர்ந்த சண்முகக்கனி (60) ஆகிய 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆலை நிர்வாகிகள் 5 பேரை தேடி வருகின்றனர்.