சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாக மேலும் 3 பேரை தருமபுரி மாவட்ட போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
தருமபுரி மாவட்டத்தில் ஏழை மக்களிடம் சிறுநீரக மோசடி நடப்பதாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ரா கர்க்கிற்கு கிடைத்த தகவலின்பேரில், போலீஸôர் விசாரணை மேற்கொண்டனர்.
மாவட்டக் காவல் துணைக் கண்காணிப்பாளர்கள் பரமேஷ்வரா, கிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் தனிப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
இதைத் தொடர்ந்து, தருமபுரி மாவட்டம், மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்த செல்வத்தின் மகன் பாலசுப்பிரமணியத்தின் ஒரு சிறுநீரகத்தை திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை வட்டம், போடிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ரமேஷுக்கு சட்டவிரோதமாக தானம் வழங்க முயற்சி செய்வது தெரிய வந்தது. இது தொடர்பாக சேலம் மாவட்டம், சங்ககிரியைச் சேர்ந்த முகவர் அய்யாவு (51), தருமபுரி மாவட்டம், மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் (40) ஆகியோரை போலீஸôர் திங்கள்கிழமை கைது செய்தனர்.
அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் நாமக்கல் மாவட்டம், திருசெங்கோடு அருகே உள்ள பெரிய மணலியைச் சேர்ந்த ஆர்.சீனிவாசன் (35), குமாரபாளையத்தைச் சேர்ந்த என்.ஷாஜகான் (45), சேலம் மாவட்டம், சங்ககிரி அருகே உள்ள லாத்தேரியைச் சேர்ந்த பி.வடிவேல் (46) ஆகிய மூன்று முகவர்களை போலீஸôர் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். சட்டவிரோதமாக சிறுநீரக விற்பனையில் ஈடுபட்டதாகக் கைது செய்யப்பட்ட 5 பேரும் பாப்பிரெட்டிப்பட்டி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர்.
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

