சென்னையின் முக்கிய இடங்களுக்கு வருகிறது புதிய சாலை test breaking newsசென்னையில் ஜெ.பி.நட்டாவின் பொதுக் கூட்டத்துக்கு அனுமதி மறுப்புமனைவி அளித்த புகார்: தலைமறைவான சின்னத்திரை நடிகர்!What is Lorem Ipsum?
/

கூடங்குளம் அணுஉலையில் மீண்டும் சப்தம், கரும்புகை?

கூடங்குளம் அணுஉலையில் மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெறுவதால், பயங்கர சப்தமும், கரும்புகையும் வருவதாக அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு புகார் தெரிவித்துள்ளது. ஆனால், இதை அணுஉலை வட்டாரம் மறுத்துள்ளது.

Updated On :12 ஜூன் 2013, 7:43 am

கூடங்குளம் அணுஉலையில் மீண்டும் சோதனை ஓட்டம் நடைபெறுவதால், பயங்கர சப்தமும், கரும்புகையும் வருவதாக அணுசக்திக்கு எதிரான போராட்டக் குழு புகார் தெரிவித்துள்ளது. ஆனால், இதை அணுஉலை வட்டாரம் மறுத்துள்ளது.

மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் தெரிவித்துள்ளனர். சோதனை எதுவும் நடைபெறவில்லை என அணுஉலை வட்டாரம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூடங்குளம் அணுஉலைக்கெதிரான தொடர் போராட்டம் இடிந்தகரையில் நடைபெற்று வருகிறது. அணுஉலையைச் செயல்படுத்த உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்த பின்னரும் அணுஉலையில் உற்பத்தி தொடங்கப்படவில்லை.

முதன்முதலாக சோதனை ஓட்டம் நடத்தப்பட்டபோது வால்வுகளில் கசிவு ஏற்பட்டதையடுத்து சோதனை ஓட்டம் நிறுத்திவைக்கப்பட்டது. பின்னர் தொடர்ந்து வால்வுகள் மாற்றும் பணி நடைபெற்றது.

இந்நிலையில், அணுஉலையில் செவ்வாய்க்கிழமை பிற்பகலில் பயங்கர சப்தம் கேட்டதாகவும், அணுஉலையிலிருந்து கரும்புகை வெளியேறுவதாகவும் அணுசக்திக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர்கள் எஸ்.பி.உதயகுமார், புஷ்பராயன் ஆகியோர் புகார் தெரிவித்தனர். பொதுமக்களுக்கு எந்த அறிவிப்புமின்றி அணுஉலை நிர்வாகம் எதையோ செயல்படுத்தி வருவதால் இந்த சப்தம் ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், அணுஉலை அதிகாரிகள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். அணுஉலையில் உள்ள ஜெனரேட்டர் சோதனை செய்யப்படுகிறது. வேறு எந்தச் சோதனையும் நடைபெறவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.