சமச்சீர் பாடத்திட்டத்தின் கீழ் இந்த ஆண்டு நடைபெற்ற பத்தாம் வகுப்புத் தேர்வில் தேர்ச்சி விகிதம் 89 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழக பொதுத் தேர்வு வரலாற்றில் இல்லாத அளவுக்கு இந்த ஆண்டு ஆயிரக்கணக்கான மாணவர்கள் அறிவியல், கணிதம், சமூக அறிவியல் பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் எடுத்துள்ளனர்.
அறிவியலில் 38 ஆயிரத்து 154 மாணவர்களும், கணிதத்தில் 29 ஆயிரத்து 905 மாணவர்களும், சமூக அறிவியலில் 19 ஆயிரத்து 680 மாணவர்களும் முழு மதிப்பெண் (100க்கு 100) எடுத்துள்ளனர்.
முதலிடத்தை 9 மாணவிகள் பிடித்தனர். முதல் மூன்று ரேங்குகளில் இந்த ஆண்டு 198 மாணவ, மாணவியர் இடம்பிடித்துள்ளனர்.
60 சதவீத மதிப்பெண்ணுக்கு மேல் 7 லட்சம் பேர்: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்பட்டன. பள்ளிகளின் மூலம் தேர்வு எழுதிய 10.51 லட்சம் மாணவர்களில் 9.35 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஒரு லட்சத்து 15 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை.
தேர்ச்சி விகிதம் கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.80 சதவீதம் அதிகரித்துள்ளது. மாணவிகள் 92 சதவீதமும் மாணவர்கள் 86 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
முதலிடத்தைப் பிடித்த மாணவிகள்: பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ். அனுஷா, மதுரை அண்ணா நகரில் உள்ள பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி மாணவி ஜே.பி.எம். தீப்தி, திருச்சி மஞ்சம்பட்டியில் உள்ள மான்ட்போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் எம்.காயத்ரி, டி.மார்சியா ஷெரின், மாமரத்துப்பாளையத்தில் உள்ள ஈரோடு இந்து கல்வி நிலைய மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி கே.ஆர்.பொன்சிவசங்கரி, திருப்பத்தூர் பிரம்மபுரம் சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி சி.எஸ்.சாருமதி, பாளையங்கோட்டை மகாராஜநகரில் உள்ள ஸ்ரீ ஜயேந்திரர் சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி பி.சோனியா, சிதம்பரத்தில் உள்ள வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவி ஆர்.ஸ்ரீதுர்கா, வேலூரில் உள்ள ஆக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எஸ்.வினுஷா ஆகியோர் 500-க்கு 498 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதல் ரேங்கைப் பெற்றுள்ளனர்.
எல்லா மாணவிகளும் சமமான மொத்த மதிப்பெண் பெற்றிருந்தாலும் ஆங்கில எழுத்துவரிசைப்படி பெயர்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளதாக தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
அரசுப் பள்ளி மாணவியர் 2 பேர்: மாநில ரேங்குகளை பெரும்பாலும் தனியார் பள்ளி மாணவர்களே பிடித்து வரும் நிலையில், முதல் மூன்று இடங்களில் இந்த ஆண்டு 2 அரசுப் பள்ளி மாணவியர் இடம்பெற்றுள்ளனர்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி எம்.தேவஸ்ரீ 500-க்கு 497 மதிப்பெண் எடுத்து மாநில அளவில் இரண்டாமிடத்தைப் பிடித்துள்ளார். வேடசந்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி டி.தீபிகா 500-க்கு 496 மதிப்பெண் மாநில அளவில் மூன்றாமிடத்தைப் பிடித்துள்ளார்.
பள்ளிகளின் மூலமாக தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றிதழ் அந்தந்த தலைமையாசிரியர் வாயிலாக ஜூன் 20-ம் தேதி வழங்கப்படும்.
விடைத்தாள் மறுகூட்டலுக்கு அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின்
www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் முறையில் ஜூன் 7 முதல் ஜூன் 10 வரை விண்ணப்பிக்கலாம்.
சிறப்பு துணைத்தேர்வு: தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான உடனடி சிறப்புத் துணைத் தேர்வு ஜூன் 24 முதல் ஜூலை 1 வரை நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகளுக்கு ஜூன் 3 முதல் 5 வரை ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்.
அறிவியலில் - 38,154 பேர்
கணிதத்தில் - 29,905 பேர்
சமூக அறிவியலில் - 19,680 பேர்
எஸ். அனுஷா
கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பெருந்துறை.
தமிழ் 99
ஆங்கிலம் 99
கணிதம் 100
அறிவியல் 100
சமூக அறிவியல் 100
ஜே.பி.எம். தீப்தி
பஸ்கோஸ் மெட்ரிக் பள்ளி, அண்ணா நகர், மதுரை.
தமிழ் 99
ஆங்கிலம் 99
கணிதம் 100
அறிவியல் 100
சமூக அறிவியல் 100
எம். காயத்ரி
மான்ட் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி.
தமிழ் 99
ஆங்கிலம் 100
கணிதம் 99
அறிவியல் 100
சமூக அறிவியல் 100
டி. மார்சியா ஷெரீன்
மான்ட் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சி.
தமிழ் 98
ஆங்கிலம் 100
கணிதம் 100
அறிவியல் 100
சமூக அறிவியல் 100
கே.ஆர். பொன்சிவசங்கரி
ஈரோடு இந்து கல்வி நிலையம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஈரோடு.
தமிழ் 99
ஆங்கிலம் 99
கணிதம் 100
அறிவியல் 100
சமூக அறிவியல் 100
சி.எஸ். சாருமதி
சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பிரம்மபுரம், வேலூர்.
தமிழ் 99
ஆங்கிலம் 99
கணிதம் 100
அறிவியல் 100
சமூக அறிவியல் 100
பி. சோனியா
ஸ்ரீஜயேந்திர சுவாமிகள் வெள்ளிவிழா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி.
தமிழ் 99
ஆங்கிலம் 99
கணிதம் 100
அறிவியல் 100
சமூக அறிவியல் 100
ஆர். ஸ்ரீதுர்கா
வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிதம்பரம்.
தமிழ் 99
ஆங்கிலம் 99
கணிதம் 100
அறிவியல் 100
சமூக அறிவியல் 100
எஸ். வினுஷா
ஆக்ஸிலியம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, வேலூர்.
தமிழ் 99
ஆங்கிலம் 99
கணிதம் 100
அறிவியல் 100
சமூக அறிவியல் 100
தொடர்புடையது

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

ஒரே நோக்கில் செயல்படும் இரண்டு முன்னணி திட்டமிடுபவர்கள் இணைந்தார்கள்

வேலுமணி கோட்டையாகத் திகழும் தொண்டாமுத்தூர்! திமுகவுக்கு சவாலா?

ஐஜேகே மாநாடு: அலைகடலென திரண்ட லட்சக்கணக்கான தொண்டர்கள்
வீடியோக்கள்

கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!
dinesh1@test.com

யு-19 உலகக் கோப்பை அரையிறுதி: இந்தியாவுக்கு 245 ரன்கள் இலக்கு!
tamil
ஆடு ஜீவிதம் உருவானது எப்படி? - விடியோ
sivashankar

அமலாக்கத் துறையைக் கொண்டு ஆம் ஆத்மி தலைவர்களை அச்சுறுத்தும் பாஜக: அதிஷி
parvathi

